குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
கனேடிய வாழ் இலங்கை முஸ்லிம்கள் அந்நாட்டு பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதியனுப்பி வைத்துள்ளனர். இலங்கையில் முஸ்லிம்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தப்படுவதாகக் குற்றம் சுமத்தி இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தில் தலையீடு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் வாழ்ந்து வரும் சிறுபான்மையின மக்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான தாக்குதல்களை நடத்துவோருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிக்குமாறு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருடியாவுவிடம் கோரியுள்ளனர்.
கடும்போக்குவாத பௌத்த பிக்குகள் மற்றும் சில குழுக்கள் இவ்வாறு தாக்குதல்களை நடத்தி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளன. முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களின் மதவழிபாட்டுத் தளங்கள், வர்த்தக நிலையங்கள் வீடுகள் உள்ளிட்டனவற்றை இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.