குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
வெளிநாட்டு நீதவான்களின் பங்களிப்பு யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளை நம்பகரமானதாக்கும் என மனித உரிமை ஆணையாளர் அம்பிகா சட்குணநாதன் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
2015ம் ஆண்டு ஒக்ரோபர் 1ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் வெளிநாட்டு நீதவான்களின் பங்களிப்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அதற்கு அரசாங்கம் இணங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரசாங்கம் இணங்கிய விடயம் ஒன்றே இந்த வெளிநாட்டு நீதவான்களின் பங்களிப்பு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுநலவாய நாடுகள் உள்ளிட்ட வெளிநாட்டு நீதவான்களின் பங்களிப்பு என தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு நீதவான்களின் பங்களிப்பு என்பது பல்வேறு வழிகளில் அர்த்தப்படுத்தலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்நாட்டு நீதிவிசாரணைப் பொறிமுறைமையில் நம்பிக்கையில்லாத நிலையில் வெளிநாட்டு நீதவான்களின் பங்களிப்பு பற்றி கவனம் செலுத்தப்படுவது வழமையானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நிலையில் வெளிநாட்டு நீதவான்களிப் பங்களிப்புடன் விசாரணை நடத்துவது பொருத்தமானதாக அமையும் எனக் குறிப்பிட்டுள்ள அம்பிகா சட்குணநாதன் சர்வதேச குற்றவியல் சட்டம் தொடர்பில் பேசினால் அது தொடர்பில் நிபுணத்துவ அறிவுடையவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.