குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்துக்கு அதிருப்தி வெளியிட்டுள்ள இளம் ஊடகவியலாளர்கள் அமைப்பு அதிகாரிகள் சுயானதீனமான முறையில் தமது பணிகளை மேற்கொள்ள ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
ஊடகவியலாளர் லசந்த கொலை செய்யப்பட்டமை, உபாலி தென்னக்கோன் மீது தாக்குல் நடத்தியமை, பிரகீத் எக்நெலிகொட காணாமல் போனமை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் இதுவரையில் உரிய நடவடிக்கை எடுக்;கப்படவில்லை என தெரிவித்துள்ள அமைப்பு குற்றவாளிகள் தண்டிக்கப்படாமை குறித்து ஜனாதிபதி ஏன் அதிருப்தி வெளியிடவில்லை எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
விசாரணை நடத்தும் அதிகாரிகளுக்கு போதியளவு ஒத்துழைப்பு வழங்காது அவர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்படுவது பொருத்தமற்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.