மாகாணங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை வழங்குவதில் உள்ள தாமதத்தினால் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதில் தடங்கல்களை ஏற்படுத்தியுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்தார்,
இதனூடாக மக்களுக்கு உடனடியாக வழங்க வேண்டிய அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதிலும் பல்வேறு தடங்கல்களை ஏற்படுத்துவதாகவும் இதனால் பொதுமக்களே பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாவதாகவும் கிழக்கு முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நேற்று மாலை ஜனாதிபதியின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சர்கள்,முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாரள்கள் கலந்து கொண்ட கூட்டத்தின் போதே கிழக்கு முதலமைச்சர் இதனைக் கூறினார் என கிழக்கு மாகாணசபையின் ஊடககுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
கிழக்கு மாகாணத்திற்கு கடந்த வருடத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் அபிவிருத்திப் பணிகள் நிறைவடைந்து அவற்றின் பல மில்லியன் ரூபாக்களுக்கான பற்றுச்சீட்டுக்களுக்கு இதுவரை நிதி வழங்கப்படவில்லை எனவும் கிழக்கு முதலமைச்சர் இதன் போது குறிப்பிட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
அத்துடன் 2017 ஆம் ஆண்டுக்கு வரவு செலவுத் திட்டத்தினூடாக ஒதுக்கப்பட்ட நிதியில் ஒரு சதமேனும் இது வரை வழங்கப்பட்டவில்லை எனவும் கிழக்கு முதலமைச்சர் சுட்டிக்காட்டியதுடன் நிதி வழங்குவதில் உள்ள தாமதம் மக்களுக்கான தொடர்ச்சியான அபிவிருத்திகளை முன்னெடுப்பதில் தடங்கல்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் எவ்வாறாயினும் மத்திய அமைச்சுக்களினூடாக நிதிகளைப் பெற்று மக்களுக்கு அபிவிருத்திகளை முன்னெடுத்து வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் கூறினார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
எனவே மாகாணசபைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியினை உரிய நேரத்தில் வழங்க ஆவண செய்ய வேண்டும் எனவும் கிழக்கு முதலமைச்சர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது