குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வெலிகடை பகுதியில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரரு;கு மீண்டும் பிணை வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக இன்று காலை சரணடைந்தநிலையில் தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிணையில் விடுவிக்கப்பட்ட ஞானசார தேரர் மீண்டும் கைது
பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் காவல்துறை புலானாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெலிகடை பகுதியில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று தொடர்பில் அவர் மீளவும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள தேரரை புதுக்கடை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னதாக இன்று காலை சரணடைந்தநிலையில் தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஞானசார தேரர் நீதிமன்றில் சரண்
Jun 21, 2017 @ 06:53
பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் நீதிமன்றில் சரணடைந்துள்ளார். கொழும்பு கோட்டே நீதிமன்றில் இன்றைய தினம் ஞானசார தேரர் சரணடைந்துள்ளார்.
ஞானசார தேரரை கைது செய்வதற்கு இரண்டு பிடிவிராந்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும், ஞானசார தேரர் சில காலமாக தலைமறைவாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நீதிமன்றில் ஆஜரான ஞானார தேரருக்கு பிணை வழங்கபபட்டுள்ளது.
1 comment
அஸ்கிரிய பீடாதிபதி வராகொட ஞானரத்ன தேரரின் கடுமையான தொனியிலான நேற்றைய ஊடக அறிக்கை ஒன்றினையடுத்து, இன்று அவர் நீதிமன்றில் சரணடைந்ததோடல்லாமல், நீதிமன்றம் விதித்த இரு பிடிவிறாந்துகளுக்கு அமைய அவர் கைது செய்யப்படாது பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளார்!
இத்தனைக்கும், ஞானசாரதேரரின் பிடிவிறாந்துக்கான காரணம், நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டேயன்றி வேறென்ன? ‘சட்டத்தின் முன் யாவரும் சமன்’, என்ற சித்தாந்தத்தை அஸ்கிரியபீடம் நிராகரிக்கின்றதா? நீதித் துறையையும், அரசையும் எச்சரிக்குமுன், ஒரு மாதமாகத் தேடப்பட்டுவரும் தேரரைச் சரணடையும்படியான கோரிக்கையை அவரிடம் அஸ்கிரிய பீடம் ஏன் முன்வைக்கவில்லை? நேற்றைய அறிக்கையொன்றின் பின், இன்று ஞானசாரதேரர் நீதி மன்றில் சரணடைகின்றாரென்றால், அஸ்கிரிய பீடம்தான் அவரை மறைத்து வைத்திருந்ததா? இதற்கு முன்னரும் பல பௌத்த பிக்குகள் பல குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்களே? அன்றெல்லாம் பௌத்த பிக்குகளுக்கு இழிவு ஏற்படவில்லையா?
‘ஞானசார தேரரின் சில நடவடிக்கைகள் ஏற்புடையதில்லை’, என்று சப்பைக்கட்டுக் கட்டும் அஸ்கிரிய பீடம், அவரது சில கருத்துக்களை புறம்தள்ள முடியாதெனக் கூறித் தனது கையாலாகாத்தனத்தை வெட்கமின்றிப் பறைசாற்றுகின்றதா? ஞானசார தேரரின் கருத்தை நியாயப்படுத்தும் அஸ்கிரிய பீடம், பௌத்த மதத்தையும், மக்களையும் பாதுகாக்கும்பொருட்டு அவரது கருத்தை அவர்களே விட்டிருக்கலாமே? ஆக, அவரின் கருத்தை நியாயப்படுத்த முயலும் அஸ்கிரிய பீடம், தனது இனவாதக் கருத்தைத்தான் அவரூடாக, அவரின் காவிக் கொய்யகத்தில் மறைந்து நின்று கூறுகின்றதா, என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை?
மதபீடங்களின் தலையீடு காரணமாகச் சட்டம் மற்றும் நீதித்துறை தனது சுயத்தை இழக்கும்போது, இலங்கையின் நீதித்துறையின் நடவடிக்கைகளை ஐ நா அதிகாரிகள் கண்டிப்பதில் தவறில்லையே? இந்த லட்சணத்தில், நீதியமைச்சர் எந்த முகத்தை வைத்துக் கொண்டு ஐ நாவின் நடவடிக்கைகள் குறித்துக் கண்டனம் தெரிவிக்கின்றாரோ? அவருக்கே வெளிச்சம்!