குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
காணாமல் போனோர் குறித்த அலுவலகத்தை உடனடியாக நிறுவுமாறு சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது. மிக நீண்ட காலமாக இந்த அலுவலகம் அமைக்கும் பணிகள் காலம் தாழ்த்தப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தியுள்ளது.
அனைத்து இன சமூகங்களையும் சேர்ந்த பல்லாயிரக் கணக்கானவர்கள் இந்த அலுவலகம் நிறுவப்படும் வரையில் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. கூடிய விரைவில் இந்த அலுவலகம் நிறுவப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபையின் தென் ஆசிய பணிப்பாளர் Biraj Patnaikதெரிவித்துள்ளார்.
காணாமல் போனோரின் குடும்ப உறுப்பினர்களை ஜனாதிபதியும் பிரதமரும் சந்தித்தமை வரவேற்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.