குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
பௌர்ணமி தினத்தில் மதுபானசாலைகள் திறக்கப்படாது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு டொலர்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் செயற்பட்டு வரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களே நாட்டில் இன முரண்பாடுகளை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளை சில ஊடகங்களும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் குழப்பி வருவதாகத் தெரிவித்துள்ள அவர் அஸ்கிரி பீடாதிபதியின் கருத்துக்கள் பெறுமதி மிக்கவை என குறிப்பிட்டுள்ளார்.
பௌர்ணமி தினங்களில் மதுபான சாலைகள் திறப்பது குறித்து எவரும் கருத்து வெளியிட முடியும் எனவும் அரசாங்கம் அவ்வாறான ஓர் தீர்மானத்தை எடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.