அரசாங்க மருத்துவர்கள் மேற்கொண்டுவரும் தொடர் தொழிற்சங்க போராட்டத்தை அடுத்து ஜனாதிபதியின் அழைப்பின் பெயரில் அரச மருத்துவ சங்கத்தினர் இன்று ஜனாதிபதியை அவரது வதிவிடத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியுடனான பேச்சு வார்த்தையில் பின்வரும் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டதாக அரச மருத்துவ சங்கத்தின் உப செயலாளர் வைத்தியர் பாலகிருஷ்ணன் சாயி நிரஞ்சன் தெரிவித்தார்.
சைட்டம் நிறுவனத்துக்கு மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதையும் அதிலிருந்து இறுதிப் பரீட்சை நடாத்தி மாணவர்களை வெளியேற்றுவதையும் உடனடியாக நிறுத்துவதட்கான சட்ட நடவடிக்கையை எடுப்பதாக முடிவு செய்யப்பட்டது
சிறிலங்கா மருத்துவ சபையின் சுயாதீன செயற்பாடுகளை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாப்பதாக ஜனாதிபதியின் உறுதி மொழி பெறப்பட்டதாகவும் மேலும் சைட்டம் நிறுவனம் தொடர்பில் மிகவிரைவில் முடிவொன்றை எடுப்பதாகவும் அரசாங்கத்தின் மேற்படி நிறுவனம் தொடர்பிலான நிலைப்பாட்டை நீதிமன்றத்திற்கு அறிவிப்பதாகவும் ஜனாதிபதி உறுதி வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்
அவற்றினைத் தொடர்ந்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தமது போராட்டத்தினைத் தற்காலிகமாக இன்று சனிக்கிழமை 12 மணியுடன் நிறுத்திக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்