டெங்கு நோயை இல்லாதொழித்து ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டியெழுப்பும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள டெங்கு ஒழிப்பிற்கான பொது செயற்திட்டம் இன்று கொழும்பு 5 இலுள்ள சிறிமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயத்தை அண்டிய பகுதிகளில் ஆரம்பமாகியுள்ளது.
டெங்கு நோயை இல்லாதொழிப்பதற்காக பொதுமக்களின் பங்களிப்புடன் அவர்கள் தமது சுற்றாடலை சுத்தமாக வைத்துக்கொள்வதனை வலியுறுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இச்செயற்திட்டத்தினை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் ஆலோசனையின்படி ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி ஊடகப் பிரிவு, ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு, பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம் மற்றும் கொழும்பு மாநகர சபையின் பங்களிப்புடன், மேற்படி செயற்திட்டம் இன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.