குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதனால் மக்கள் தன்னைத் திட்டுகின்றார்கள் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
நாள் தோறும் முகநூலில் இது தொடர்பில் கேள்வி எழுப்பப்படுவதாகவும், அமைதியாக அவற்றுக்கு பதிலளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்காக சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் என குறிப்பிட்டுள்ள அவர் அரசாங்கம் தேர்தல் நடத்தக் கூடிய பின்னணியை உருவாக்கினால் உடனடியாக தேர்தலை நடத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உத்தேச உள்ளுராட்சி மன்றத் திருத்தச் சட்டத்தை பாராளுமன்றில் சமர்ப்பித்து நிறைவேற்றிக் கொடுத்தால் 75 நாட்களில் தேர்தலை நடத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் நடத்தப்படாமை குறித்த குற்றச்சாட்டு தேர்தல் ஆணைக்குழுவின் மீதே சுமத்தப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.