இலங்கையில் தடுப்பு முகாமொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரொஹிஞ்சா முஸ்லிம் பெண்ணொருவரை பாலியல் வன்முறைக்குள்ளானதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், சந்தேகநபரான காவல்துறை உத்தியோகத்தர்; கைது செய்யப்பட்டிருந்தார்.
இவரை எதிர்வரும் வியாழக்கிழமை வரை இவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அன்றைய தினம் அடையாள அணிவகுப்பில் அவரை முன்னிலைப்படுத்துமாறும் நீதிமன்றத்தால் கட்டளையிடப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பில் முன்னலையான சட்டத்தரணி தெரிவித்துள்ளர்h.
மிரிஹான சட்டவிரோத தடுப்பு முகாமில் நீதிமன்ற உத்தரவின் பேரில் 7 பெண்கள் மற்றும் 16 சிறுவர்கள் உள்ளிட்ட மியான்மர் நாட்டை சேர்ந்த 30 ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 22 வயதான பெண்ணொருவர் தனது நோயின் காரணமாக அரச மருத்துவமனையொன்றில் தங்கியிருந்து சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் பாலியன் வன்முறைக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது