குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரச சார்பற்ற நிறுவனங்களை நெறிப்படுத்துவதற்கு புதிய சட்டங்கள் அவசியம் என நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
நாட்டில் இயங்கி வரும் பல அரச சார்பற்ற நிறுவனங்கள் தேசிய நோக்கங்களுக்கு அச்சுறுத்தலான வகையில் இயங்கி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ள அவர் அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் குறித்து அமைச்சர் மனோ கணேசனிடம் சில யோசனைத் திட்டங்களை முன்வைக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கம் பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றின் மூலம் அரச சார்பற்ற நிறுவனங்களை நெறிப்படுத்த சில திட்டங்களை முன்வைத்திருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.