குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கட்டாருக்கான இலங்கைத் தூதுவரும் பிரபல வர்த்தகருமான ஏ.எஸ்.பி லியனகே, கிழக்கு மாகாண ஆளுனராக நியமிக்கப்படலாம் என அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏ.எஸ்.பி லியனகே இன்றைய தினம் அவசரமாக கட்டாரிலிருந்து நாடு திரும்பியுள்ளார். நாடு திரும்பிய லியனகே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.
இதுவரை காலமும் கிழக்கு மாகாண ஆளுனராக கடமையாற்றிய ஒஸ்டின் பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒஸ்டின் பெர்னாண்டோ ஜனாதிபதியின் செயலாளராக நியமிக்கப்பட்டதனால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு, கட்டாருக்கான தற்போதைய தூதுவர் ஏ.எஸ்.பி லியனகேவை நியமிக்குமாறு பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில் ஏ.எஸ்.பி லியனகே கிழக்கு மாகாண ஆளுனராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.