172
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புதிய அரசியல் சாசனமொன்றுக்கு எவ்வித அவசியமும் கிடையாது என பௌத்த பீடாதிபதிகள் தெரிவித்துள்ளனர். நாட்டின் மூன்று பௌத்த பீடங்களின் பீடாதிபதிகளும் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று மாலை பௌத்த பீடாதிபதிகளுக்கு இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பௌத்த பிக்குகளின் எதிர்ப்பினால் புதிய அரசியல் சாசனம் அமைப்பதில் அரசாங்கம் நெருக்கடி நிலையை எதிர்நோக்கி வருகின்றது.
தற்போதைய அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் செய்வதாகக் கூறியே மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love