குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி (சயிட்டம்) தொடர்பில் ஆளும் கட்சிக்குள் பொதுவான இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட வேண்டுமேன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாறாக ஒவ்வொரு அமைச்சர்களும் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை வெளியிடக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அமைச்சரவைக் கூட்டத்தில் நேற்றைய தினம் இந்த விடயம் குறித்து பேசப்பட்டபோது சில அமைச்சர்கள் மாறுபட்ட நிலைப்பாடுகளை வெளியிட்டிருந்தனர். அமைச்சர்களான ராஜித சேனாரட்ன, சம்பிக்க ரணவக்க, எஸ்.பி. திஸாநாயக்க, தயாசிறி ஜயசேகர உள்ளிட்டவர்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.
இதன் போது பொதுவான அடிப்படையில் ஆளும் கட்சிக்குள் மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.