குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புதிய அரசியல் சாசனம் குறித்த பணிகள் முன்னெடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சரவையின் இணைப் பேச்சாளர் மற்றும் சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன இதனைத் தெரிவித்துள்ளார். தேவை ஏற்பட்டால் உத்தேச அரசியல் சாசனம் தெடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தத் தயார் எனவும’ அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசியல் சாசனம் அமைப்பதற்காகவே மக்கள் இந்த அரசாங்கத்திற்கு ஆணை வழங்கியதாகவும் அந்த வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதியதாக அரசியல் சாசனம் அமைக்கப்பட வேண்டியதில்லை என இலங்கையின் மூன்று பீடங்களினதும் ,மாநாயக்க தேரர்கள் நேற்று தீர்மானித்திருந்தனர்.
மாநாயக்கத் தேரர்களின் இந்தத் தீர்மானம் அரசாங்கத்தின் அரசியல் சாசன முனைப்புக்களுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
புதிய அரசியல் சாசனமொன்றை அமைக்கும் பணிகளை அரசாங்கம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாகவும் பாராளுமன்றிலும் அதற்கான முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஆளும் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.