Home இலங்கைஜனாதிபதி கண்டியில் இன்று மாநாயக்க தேரர்களை சந்திக்க உள்ளார்

ஜனாதிபதி கண்டியில் இன்று மாநாயக்க தேரர்களை சந்திக்க உள்ளார்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கண்டியில் இன்றைய தினம் மாநாயக்க தேரர்களை சந்திக்க உள்ளார். பௌத்த மதம் மற்றும் பௌத்த விஹாரைகள் தற்போது எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் மற்றும் புதிய  அரசியல் சாசனம் ஆகியன தொடர்பில் ஜனாதிபதிக்கும் மாநாயக்க தேரர்களுக்கும் இடையில் சந்திப்பு நடத்தப்பட உள்ளது.

கண்டியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று மாலை நடத்தப்பட உள்ள இந்த சந்திப்பில் பௌத்த சாசன மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவும் இந்த சந்திப்பில் பங்கேற்க உள்ளார்.

இலங்கையில் புதிதாக அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டியதில்லை என மாநாயக்க தேரர்கள் அண்மையில் கூட்டாக இணைந்து விடுத்த அறிவிப்பானது அரசாங்கத்தின் நல்லிணக்க முனைப்புக்களை பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மாநாயக்க தேரர்களை இன்றைய தினம் சந்தித்து புதிய அரசியல் சாசனம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More