Home இலங்கை அனைத்து இலங்கையர்களுக்கும் சுகாதார காப்பீட்டுத் திட்டமொன்று அறிமுகம்

அனைத்து இலங்கையர்களுக்கும் சுகாதார காப்பீட்டுத் திட்டமொன்று அறிமுகம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அனைத்து இலங்கையர்களுக்கும் சுகாதார காப்பீட்டுத் திட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. அபிவிருத்தி அடைந்த நாடுகளைப் போன்று இலங்கையில் அனைத்து பிரஜைகளையும் உள்ளடக்கி சுகாதார காப்பீட்டுத் திட்டமொன்று அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் தொடர்பில் அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் உரிய தரத்தில் சுகாதார காப்பீட்டுத் திட்டமொன்றை அறிமுகம் செய்வதனால், சிறந்த சுகாதாரமுடைய சமூகத்தை கட்டியெழுப்ப முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேச்சுவார்த்தை நடத்தாது இவ்வாறான திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்தால் சுகாதாரத்துறையை அரசாங்கம் தனியார் மயப்படுத்துவதாக குற்றம் சுமத்தப்படக் கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More