குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவை மூடுவதற்கு முயற்சிக்கப்படுவதாக ஜே.வி.பி கட்சி தெரிவித்துள்ளது. நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவை மூடுவதற்கு முயற்சிக்கப்படுவதாக ஜே.வி.பி.யின் சிரேஸ்ட உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரவையும், பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவினையும் கலைப்பதற்கு முயற்சிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு நிறுவனங்களினாலும் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளை முடிவுக்குக் கொண்டு வர ஜனாதிபதியும் பிரதமரும் கூட்டாக இணைந்து முயற்சிக்கின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆயிரக் கணக்கான முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் வெறும் 450 முறைப்பாடுகள் தொடர்பிலேயே விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் என்ன காரணத்திற்காக பிரதமரும் ஜனாதிபதியும் விசாரணைகளை காலம் தாழ்த்தி வருகின்றார்கள் என்பது தமக்கு புரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
வெளிப்படையான விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை தண்டிக்குமாறு கோருவதாகத் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.