குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கையின் உத்தேச சட்டத்திற்கு இந்திய மீனவர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
வெளிநாட்டு படகுகள் அத்து மீறி மீன்பிடியில் ஈடுபட்டால் பாரியளவு தொகை அபராதத்தை விதிப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபடும் வெளிநாட்டு கப்பல்கள் படகுகளுக்கு இரண்டு கோடி ரூபா முதல் 20 கோடி ரூவா வரையில் அபராதம் விதிக்கும் வகையில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டம் இந்திய மீனவர்களை பெரிதும் பாதிக்கும் எனவும் இந்திய மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சட்டம் அமுல்படுத்தப்பட்டால் குறிப்பாக தமிழக மீனவர்கள் பெரும் நெருக்குதல்களை எதிர்நோக்க நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது.