குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உமா ஓயா திட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே பொறுப்பு சொல்ல வேண்டுமென அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
உமா ஓயா திட்டம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ள தீர்வுத் திட்டம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியினால் திருப்தி அடைய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு பெரும்பகுதி பூர்த்தியாகிய நிலையிலேயே புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பண்டாரவளை நீரை ஹம்பாந்தோட்டைக்கு எடுத்துச் செல்லும் நோக்கில் மஹிந்த இந்த திட்டத்தை முன்னெடுத்தார் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த திட்டத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து ஜனாதிபதி விசாரணை செய்து வருகின்றார் எனவும், நல்ல தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்படும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.