கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் விரைவில் கடை யடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங் கலத்துக்கு நேற்று மாலை சென்ற அவர், அப்பகுதி மக்கள் மற்றும் வணிகர்களை சந்தித்துப் பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கதிராமங்கலம் மக்களின் போராட்டம் 100 சதவீதம் நியாயமானது எனவும் நேர்மையானது எனவும் தெரிவித்த அவர் மக்கள் காந்திய வழியில் தங்களது போராட்டத்தை நடத்தி வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் இப்பகுதி மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு, அவர்களுடைய கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும் இல்லை யென்றால், விரைவில் ஒருங் கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிகர்கள் சார்பில் ஒரு நாள் கடையடைப்பு போராட் டம் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிர்வாகத்துக்கு எதிராக போராடி யதற்காக கைது செய்யப்பட்டவர் களை எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய வலியுறுத்தி, கடந்த முதலாம் திகதி முதல் அங்கு கடையடைப்பு போராட்டம் நடை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.