குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி பூநகரி குடமுருட்டிக் குளத்தின் கீழ் வறட்சியால் அழிவடைந்து கொண்டிருக்கும் 321 ஏக்கர் நெற்பயிரைக் காப்பதற்கு அக்கராயன் குளத்தில் இருந்து நீரினைப் பெற்றுக் கொள்வது என ஆலோசிக்கப்பட்ட போதிலும் அத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே குடமுருட்டிக்குளம் நீர் மட்டம் குறைவடைந்து சிறுபோக நெற்செய்கைக்கு நீர் விநியோகம் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ள நிலையில் அக்கராயன் குளத்தில் இருந்து நீரினைப் பெற முடியுமா என ஆலோசிக்கப்பட்ட போதிலும் அக்கராயன் குளத்தின் கீழான சிறுபோக நெற்செய்கைக்கு மட்டுமே நீர் போதுமான நிலையில் உள்ளதன் காரணமாக குடமுருட்டிக் குளத்திற்கு மேலதிக நீர் வழங்க முடியாத நிலை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே குடமுருட்டிக் குளம் சிறுபோக நெற்செய்கை அழிவடைந்துக் கொண்டிருக்கும் நிலையில் அக்கராயன் குளத்தின் நீரையும் குடமுருட்டிக் குளத்திற்கு வழங்கி அக்கராயன் சிறுபோக நெற்செய்கையையும் அழிவடைவதைத் தவிர்க்கும் வகையில் அக்கராயன் குளத்தில் இருந்து குடமுருட்டிக் குளத்திற்கு நீர் வழங்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. இதே வேளை குடமுருட்டிக் குளத்தின ;கீழான நெற்செய்கைக்கான நீர் விநியோகம் மேற்கொள்ள முடியாத நிலையில் மழை வீழ்ச்சியில் தான் சிறுபோகம் காப்பாற்றுவதற்கான வழிகள் உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.