சிக்கிம் மாநில எல்லையில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதியிலிருந்து இந்திய படைகள் வெளியேற வேண்டும் என்ற சீனாவின் எச்சரிக்கையை கருத்தில் கொள்ளாமல் இந்திய ராணுவம் தொடர்ந்து அங்கு முகாமிட்டிருக்க தீர்மானித்துள்ளுத
சிக்கிம் மாநில எல்லையில் இந்தியா, சீனா, பூட்டானின் எல்லைகள் இணையும் முச்சந்தி டோகாலா என்ற பகுதியில் உள்ளது. இந்த பகுதி மீது சீனாவும் பூடானும் உரிமை கொண்டாடுகின்ற நிலையில் குறித்த பகுதியில் சீன ராணுவம் வீதி அமைக்க முயற்சி செய்தது.
இதனால் இந்தியாவைக் கண்காணிக்க சீன ராணுவம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்து வீதி அமைக்கும் பணியை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியதால், இரு தரப்புக்கும் இடையே கடந்த ஒரு மாதமாக மோதல் நீடிக்கிறது.
இதனால் இரு நாட்டு ராணுவமும் அப்பகுதியில் ராணுவத்தை குவித்துள்ளதால் போர் பதற்றம் நிலவுகிறது.
இதனிடையே, எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள ராணுவ வீரர் களை இந்தியா திரும்பப் பெற வேண்டும். இந்த விவகாரத்தில் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. எல்லாம் இந்தியாவின் கையில்தான் உள்ளது என்று சீனா தெரிவித்திருந்தது.
ஏனினும் சீன அரசின் அழுத் தத்துக்கு அடிபணியப் போவ தில்லை என்ற நிலைப்பாட்டை இந்திய ராணுவம் எடுத்துள்ளது. சர்ச்சைக்குரிய பகுதியிலிருந்து சீன படைகள் வெளியேறாவிட்டால் டோகாலா பகுதியில் தொடர்ந்து முகாமிட்டிருப்பது என இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது.