Home இலங்கைபருத்தித்துறை காவல்துறையினர் அதிகாரத்தை மீறி செயற்பட்டுள்ளனர் – காவல்துறை ஊடகப் பேச்சாளர்

பருத்தித்துறை காவல்துறையினர் அதிகாரத்தை மீறி செயற்பட்டுள்ளனர் – காவல்துறை ஊடகப் பேச்சாளர்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பருத்தித்துறை காவல்துறையினர் அதிகாரத்தை மீறி செற்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது இந்த விடயம் அம்பலமாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் காவல்துறை உப பரிசோதகர், காவல்துறை கான்ஸ்டபிள் ஆகியோரின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய லொறி சாரதி தலைமறைவாகியுள்ளார்.

துப்பாக்கி;ச் சூட்டில் உயிரிழந்தவர் லொறி சாரதியின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை   துப்பாக்கிச் சூடு மேற்கொண்ட காவல்துறையினர் இருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.  யாழ் பருத்தித்துறை நீதிமன்றம் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More