குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மேல் மாகாணசபை அரசியல் சாசனத்தை மீறிச் செயற்பட முயற்சிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
பொரளை ஸ்ரீ வஜிராராம பௌத்த மத்திய நிலையத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றின் அனுமதியின்றி எந்தவொரு மாகாண சபையும் வரி அறவீடு செய்ய முடியாது என சுட்டிக்காட்டியுள்ள அவர் அரசியல் சாசனத்தின் 148ம் சரத்தின் பிரகாரம் வரி அறவீடு செய்யும் பூரண அதிகாரம் பாராளுமன்றிற்கு மட்டுமே காணப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றின் அனுமதியின்றி எந்தவொரு நிறுவனமும் வரி அறவீடு செய்ய முயற்சித்தால் அது சட்டவிரோதமான செயற்பாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேல் மாகாணத்தில் பயன்படுத்தப்படாத நிலங்களுக்கு 2 வீத வரி அறவீடு செய்யப்படும் என அண்மையில் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய வெளியிட்ட கருத்து தொடர்பில் பந்துல குணவர்தன இவ்வாறு பதிலளித்துள்ளார்.