குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பீ. தசநாயக்கவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவரை எதிர்வரும் ஓகஸ்ட் 02 ஆம்; திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2008 – 2009 காலப்பகுதியில் 5 தமிழ் இளைஞர்கள் உட்பட 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் டி.கே.பீ. தசநாயக்க குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இணைப்பு4 – தமிழ் இளைஞர்கள் கடத்தல் தொடர்பில் கைதான கடற்படையின் முன்னாள் பேச்சாளருக்கு விளக்க மறியல்
Jul 14, 2017 @ 05:09
கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பீ. தசநாயக்க எதிர்வரும் 19ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்றைய தினம் தசாநாயக்க, கொழும்பு கோட்டே நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கடந்த புதன்கிழமை கடற்படையின் முன்னாள் பேச்சாளர் தசநாயக்கவை கைது செய்திருந்தனர். கடந்த மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் வெள்ளவத்தையைச் சேர்ந்த 5 தமிழ் இளைஞர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தசநாயக்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 2008 மற்றும் 2009ம் ஆண்டு காலப்பகுதியில் இந்த சம்பவங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இணைப்பு2 கடற்படையின் முன்னாள் பேச்சாளர் தசநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்
Jul 12, 2017 @ 15:39
கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பீ. தசநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார். வெள்ளை வான் கடத்தல் சம்பவம் தொடர்பில் இன்றைய தினம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், தசநாயக்கவை கைது செய்துள்ளனர்.
வெள்ளவத்தையைச் சேர்ந்த 5 தமிழ் இளைஞர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தசநாயக்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 2008 மற்றும் 2009ம் ஆண்டு காலப்பகுதியில் இந்த சம்பவங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடற்படையின் முன்னாள் பேச்சாளர் தசநாயக்க வெளிநாடு செல்லத் தடை
Jul 12, 2017 @ 10:59
கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கப்டன் டி.கே.பீ. தசநாயக்க வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வெள்ளவத்தையில் ஐந்து தமிழ் இளைஞர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்ட சம்பவங்களுடன் தசநாயக்கவிற்கு தொடர்பு உண்டு என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பயிற்சி நெறி ஒன்றை கற்பதற்காக வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு தசநாயக்க கோரிக்கை விடுத்திருந்தார்.
எனினும் குற்ற விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட உள்ள ஒர் சந்தேக நபர் வெளிநாடு செல்ல அனுமதிக்க முடியாது என கொழும்பு கோட்டே நீதவான் லங்கா ஜயரட்ன இன்று தெரிவித்துள்ளார். கப்டன் தசநாயக்க தற்பொது வெலிசர கடற்படை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.