சீனாவுடனான பிரச்சினை நல்லவிதமாக கையாள முடியும் என இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். கருத்து வேறுபாடுகள் தகராறாக முற்றும் வகை யில் இருதரப்பும் மாற அனுமதிக்கக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சிக்கிம் மாநில எல்லையில் இந்தியா, சீனா, பூடானின் எல்லைகள் சந்திக்கின்றன. இந்த பகுதியில் உள்ள டோகாலா பகுதிக்கு சீனாவும் பூட்டானும் உரிமை கொண்டாடுகின்றன.
அப் பகுதியில் சீன ராணுவம் வீதிஅமைக்க மேற்கொண்ட முயற்சியினை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியதால் இரு நாடுகளுக்கிடையே போர் பதற்றம் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.