பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஷீனாவின் அழைப்பின்பேரில் மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமாக பங்களாதேஷ் சென்றுள்ள ஜனாதிபதி n மைத்ரிபால சிறிசேன இன்று (13) முற்பகல் பங்களாதேஷ் டாக்கா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.
டாக்கா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதியை பங்களாதேஷின் ஜனாதிபதி மொஹமட் அப்துல் ஹமீட் மிகவும் சிநேகபூர்வமாக வரவேற்றதுடன், 21 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு, இராணுவ அணிவகுப்புடன் கோலாகல வரவேற்பும் அளிக்கப்பட்டதென ஜனாதிபதி செயலக ஊடக குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
பங்களாதேஷின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், நிதி அமைச்சர், சுகாதார அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்ட மக்கள் பிரதிநிதிகளும் ஜனாதிபதியை வரவேற்பதற்காக விமான நிலையத்திற்கு வருகைத் தந்திருந்தனர்.
இந்த பயணத்தின் போது இருநாடுகளுக்குமிடையே விவசாயம், கல்வி, வெளிவிவகார பயிற்சிகள், குடிவரவு மற்றும் குடியகல்வு போன்ற துறைகளில் புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் இதன்போது கைச்சாத்திடப்படவுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஜனாதிபதி இன்று பங்களாதேஸிற்கு பயணம்
july 13, 2017 @ 02:42
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன இன்றைய தினம் பங்களாதேஸிற்கு பயணம் செய்ய உள்ளார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டு அவர் இவ்வாறு பங்களாதேஸிற்கு செல்ல உள்ளார்.
பங்களாதேஸ் பிரதமர் சேக் ஹசீனாவின் அழைப்பினை ஏற்றுக்கொண்டு ஜனாதிபதி இந்த பயணத்தினை மேற்கொள்கின்றார்.
பங்களாதேசின் பிரதமர் ஹசீனா, சுகாதார அமைச்சர், வெளிவிவகார அமைச்சர், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இந்த பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையில் பல்வேறு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
1972ம் ஆண்டு முதல் இலங்கைக்கும் பங்களாதேஸிற்கும் இடையில் ராஜதந்திர உறவுகள் நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.