298
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பாரியளவில் போராட்டமொன்று வெடிக்கும் என கூட்டு எதிர்க்கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்ந்தும் ஒத்தி வைக்கப்பட்டால் பாரியளவில் போராட்டம் வெடிக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஒக்ரோபர் மாதத்தில் தேர்தல் நடத்தப்படாவிட்டால் பாரியளவிலான போராட்டம் வெடிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்ணீர்ப் புகைக் குண்டுகளுக்கோ அல்லது நீர்த்தாரை பிரயோகத்திற்கோ அஞ்சப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love