Home இலங்கைபடைவீரர்கள் அச்சமின்றி வாழக்கூடிய சூழ்நிலை காணப்படுகின்றது

படைவீரர்கள் அச்சமின்றி வாழக்கூடிய சூழ்நிலை காணப்படுகின்றது

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

படைவீரர்கள் அச்சமின்றி வாழக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கபில வைத்தியரட்ன தெரிவித்துள்ளார்.

புதிய பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டதனைத் தொடர்ந்து, கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பலவந்த காணாமல் போதல்கள் குறித்த சட்ட மூலத்தினால் படைவீரர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில தரப்பினர் போலியாக இவ்வாறு பிரச்சாரம் செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். தேவையயற்ற வகையில் கைதுகள் மேற்கொள்ளப்படாது என அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More