206
அவுஸ்திரேலியா அருகே பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவான டோங்காவின் தென் பகுதியில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனதல் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் நின்றறுள்ளனர். வீதிகளில் லேசான விரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடலுக்கு அடியில் 97 கி.மீட்டர் ஆழத்தில் உருவான இந்ந நிலநடுக்கமானது 6.1 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இதனால் கடலில் பாரிய அலைகள் எழுந்துள்ளன. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் வெளிவரவில்லை. எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
Spread the love