கதிராமங்கலத்தில் போராட்டம் தொடர்பாக ஓஎன்ஜிசி நிறுவனம் தொடர்ந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேரின் பிணை மனுக்கள் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
தஞ்சாவூர் மாவட்டம் கதிரா மங்கலத்தில் இருந்து ஓஎன்ஜிசி நிர்வாகம் வெளியேற வேண்டும். இதற்காக போராடியதற்காக கைது செய்யப்பட்ட 10 பேரை விடுதலை செய்ய வேண்டும். கதிரா மங்கலம் எல்லைகளில் நிறுத்தப் பட்டுள்ள பொலீஸாரை திரும்பப் பெற வேண்டும் என வலி யுறுத்தி கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டம் இன்று 60வது நாளாக தொடர்கின்றது. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் முதல் கால வரையற்ற உண்ணாவிரதம் நடை பெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த 10 பேர் மீது கடந்த முதலாம் திகதி ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் பிணை கோரிய மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில் ஓஎன்ஜிசி நிறுவன பொறியாளர் கைது செய்யப்பட்டவர்கள் ஓஎன்ஜிசிக்கு எதிராக தேச விரோத பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர் களை விடுதலை செய்தால், ஓஎன்ஜிசியின் பணிகள் பாதிக்கப் படும். அங்கு, மீண்டும் பதற்றம் ஏற்படும் எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பிணை மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த நிலையில் போராட்டம் தொடர்கின்றது.