குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நல்லிணக்கத்தினை வெற்றிகரமாக அமுல்படுத்துவதிலேயே இலங்கையின் நிலையான சமாதானமும் செழுமையும் தங்கியுள்ளதென இலங்கைக்கு வந்துள்ள அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் நடத்திய சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நல்லிணக்கத்தை அமுல்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் சகல முயற்சிகளுக்கும் அவுஸ்ரேலியா மிகவும் வலுவான ஒத்துழைப்பை நல்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நிலையான சமாதானத்தில் ஒவ்வொரு நாடும் அக்கறையுடன் உள்ளதென்பதை நாம் அறிவோம் என தெரிவித்த அவர் இலங்கையில் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதில் அவுஸ்ரேலியா தொடர்ந்தும் ஆதரவாக செயற்படும் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை எனவும் தெரிவித்துள்ளர்h.
அத்தோடு, நாட்டின் அரசியல் மறுசீரமைப்பு பணிகள், மக்களின் நிலங்களை கையளித்தல் மற்றும் புனரமைப்புப் பணிகளில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்விடயங்களுக்கும் அவுஸ்ரேலியா தொடர்ந்தும் உதவும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை இலங்கையில் டெங்கு ஒழிப்பிற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் நிதி உதவி வழங்குவதாகவும் ஜூலி பிஷொப் அறிவித்துள்ளார்.
டெங்கு நோய் தொடர்பிலான கூட்டு ஆய்வு நடவடிக்கைகளுக்காக அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக்கு 116 மில்லியன் ரூபாவினை உதவியாக வழங்க உள்ளது. பக்டீரியா ஒன்றின் மூலம் டெங்குவை கட்டுப்படுத்த ஆய்வுகள் நடத்தப்பட உள்ளது.