இந்தியாவின் 14வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மீராகுமாரை விட 4 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்குகள் மேலதிகமாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
மொத்தமுள்ள 10 லட்சத்து 98,882 வாக்குகளில் 5.50 லட்சத்துக்கு மேல் வாக்குகளை பெற்று அவர் பெற்றுள்ளார்.
எதிர்க்கட்சி வேட்பாளர் மீராகுமாரைவிட இருமடங்கு வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார். இதனை தொடர்ந்து பாஜகவினர் தலைநகர் டெல்லி உட்பட பல்வேறு மாநிலங்களிலும் தொண்டர்கள் வெடி வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
இந்திய ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குகளை எண்ணும் பணி நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெறுகிறது:-
Jul 20, 2017 @ 05:38
இந்திய ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குகளை எண்ணும் நடவடிக்கை இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறுகிறது. துற்போது ஜனாதிபதியாக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் இந்த மாதம் 25ஆம் திகதியுடன் முடிவடைவதனால் கடந்த 17ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது.
மாநிலங்களில் வாக்களித்த வாக்குப் பெட்டிகள் அன்றைய தினமே விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்லப்பட்டன. இதில் நான்காயிரத்து 896 சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனரர்.
இந்த தேர்தலில் பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக மீராகுமாரும் போட்டியிட்ட நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. மொத்தம் 5 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகின்றன.