குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷொப் இன்றையதினம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரை சந்தித்துள்ளார்.
45 நிமிடங்கள் வரை இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது இலங்கையில் இதுவரையான காலமும் உருவாக்கப்பட்ட அரசியல் சாசனங்களில் சகல இன மக்களின் கருத்துக்களும் உள்வாங்கப்படவில்லை எனவும் இதுவே இலங்கையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளுக்கு காரணம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் எடுத்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த முரண்பாட்டு நிலையினை தீர்ப்பதற்கு அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக் கூடியவகையில் அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர் எடுத்துரைத்துள்ளார்.
மேலும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் காணிப்பிரச்சினை, காணாமல் போனோர் மற்றும் மீள்குடியேற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகவும் அவுஸ்ரேலிய அமைச்சருடன் கலந்துரையாடியதாக எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். குறித்த சந்திப்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம் ஏ சுமந்திரனும் கலந்து கொண்டுள்ளார்.
1 comment
தமிழ் தேசிய கூட்டமைப்பில் இதுவரையான காலமும் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக ரி.என்.ஏயின் அங்கத்துவ கட்சிகளின் கருத்துக்கள் உள்வாங்கப்படவில்லை எனவும் இதுவே ரி.என்.ஏயில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளுக்கு காரணம் எனவும் சம்பந்தன் எடுத்துரைப்பாரா?
மேலும் இந்த முரண்பாட்டு நிலையினை தீர்ப்பதற்கு அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக் கூடியவகையில் முடிவுகள் எடுக்கப்படவேண்டும் எனவும் சம்பந்தன் உணருவாரா?
இதை விட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக அவுஸ்ரேலிய அமைச்சருடன் கலந்துரையாடியதாக சம்பந்தன் தெரிவித்துள்ளார். குறித்த சந்திப்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சுமந்திரன் பங்கேற்க அழைக்கப்பட்டது மாதிரி அங்கத்துவ கட்சிகளின் பிரதிநிதிகளை எதிர்கால கூட்டங்களில் கலந்து கொள்ள சம்பந்தன் அழைப்பாரா?