குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
இந்த ஆண்டின் இறுதிக்குள் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் கிடைக்கும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. பெல்ஜியத்தின் தலைநகர் பிரசல்ஸிற்கு சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங் வரிச் சலுகைத் திட்டத்தைப் பெற்றுக் கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் என அமைச்சர் நிரோசன் பெரேரா தெரிவித்துள்ளார்.
வரிச் சலுகைத் திட்டத்தைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் சில சுற்றுப் பேச்சுவார்த்தைகள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மனித உரிமை பிரச்சினைகள் காரணமாக கடந்த 2009ம் ஆண்டு இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை ரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.