Home இந்தியாஇந்திய ராணுவத்தில் ஆயுதப் பற்றாக்குறை நிலவுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது:-

இந்திய ராணுவத்தில் ஆயுதப் பற்றாக்குறை நிலவுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது:-

by admin


இந்திய ராணுவத்தில் ஆயுதப் பற்றாக்குறை நிலவுவதாகவும், போர் வந்தால் 10 நாட்களுக்குதான் ஆயுதங்கள் போதுமானதாக இருக்கும் எனவும் மத்திய கணக்கு தணிக்கையாளர் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் கணக்கு தணிக்கையாளர் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதப்பற்றாக்குறை பிரச்சினை முன்பிருந்தே நீடித்து வருகிறது எனவும் அது படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தாலும் கூட இன்னும் நிறையவே பற்றாக்குறை உள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2013ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் 50 சதவீத ஆயுதங்களுக்கு பற்றாக்குறை உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் 2016 செப்டம்பர் நிலவரப்படி ராணுவத்தில் 40 சதவீத ஆயுதப் பற்றாக்குறை உள்ளதாக, சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அதாவது 3 வருடங்களில் 10 சவீதம் அளவுக்குதான் ஆயுதப் பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளது. அறிக்கையில் மொத்தமுள்ள 152 வகை ஆயுதங்களில் 61 வகை ஆயுதங்கள், போர் ஏற்பட்டால் 10 நாட்களுக்கு தாங்காது என்றும், இது கவலைக்குரிய விஷயம் என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More