குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) பயன்பாடு குறித்து புதிய சட்டங்கள் அறிமுகம் செய்யப்படும் என பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
சிறிய ரக ஆளில்லா விமானங்களை பயன்படுத்துவோர் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டுமெனவும், பாதுகாப்பு தொடர்பான பயிற்சி நெறி ஒன்றை கற்க வேண்டுமெனவும் புதிய நியதிகள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 250 கிராமிற்கும் மேற்பட்ட எடையுடைய ட்ரோன்களை பயன்படுத்துவோருக்கு இந்த சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது.
ட்ரோன்களை பயன்படுத்துவோர் பிரித்தானியாவின் பாதுகாப்பு, காப்புக் காரணிகள் போன்றன குறித்து போதியளவு தெளிவுடன் இருக்க வேண்டியது அவசியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரோன்களினால் இதுவரையில் பாரிய விபத்துக்கள் ஏதும் இடம்பெறவில்லை என்ற போதிலும் எதிர்வரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.