குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் சாகல ரத்னாயக்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்தே இந்தப் போராட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையில் உள்ள அனைத்து சிகிச்சை பிரிவுகளும் இன்று மாலை 4 மணிக்குப் பின்னர் வழமைப்போல் செயற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணைப்பு 2 -அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது
Jul 25, 2017 @ 03:54
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. இன்று காலை 8மணிக்கு ஆரம்பமான இந்தப் போராட்டம் நாளை காலை 8 மணிவரை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு எதிரான செயற்பாடுகளை நிறுத்துதல் மற்றும் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்தே போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
இருப்பினும் டெங்கு தொற்று நோயாளர்களுக்கான சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சை நிலையம், சிறுவர் சிகிச்சை நிலையம், கர்ப்பிணித் தாய்மார்களுக்கான சிகிச்சை நிலையம் மற்றம் அவசர சிகிச்சை பிரிவு என்பன தொடர்ச்சியாக சேவையில் இருக்கும் எனவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.
வேலை நிறுத்தப் போராட்டமொன்றில் ஈடுபடப் போவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை
Jul 23, 2017 @ 13:47
வேலை நிறுத்தப் போராட்டமொன்றில் ஈடுபடப் போவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 24 மணித்தியால போராட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
சுகாதார அமைச்சிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் உரிய முறையில் நிறைவேற்றப்படாவிட்டால் வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணிக்கு இந்தப் வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.