Home உலகம்ஆப்கானிஸ்தானில் அரச வைத்தியசாலை மீது தலிபான்கள் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் -35 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் அரச வைத்தியசாலை மீது தலிபான்கள் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் -35 பேர் உயிரிழப்பு

by admin

ஆப்கானிஸ்தானின்  மத்திய பகுதியில் உள்ள  கோர் மாகாணத்தில் உள்ள அரச வைத்தியசாலைக்கு  இன்றையதினம் தீவைத்த தலிபான் தீவிரவாதிகள் அங்கிருந்த நோயாளிகள்  அவர்களது உறவினர்கள் மற்றும் வைத்தியசாலை   ஊழியர்கள் மீது மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில்    35 பேர் உயிரிழந்ததாகவும், பலர்  காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆப்கானிஸ்தானில் ஆட்சியாளர்களுக்கு எதிராக    தலிபான் தீவிரவாதிகள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் அவர்களின்   தாக்குதலில் இதுவரை பல்லாயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானின்   கோர் மாகாணத்துக்குட்பட்ட டயாவாரா மாவட்டத்தை தலிபான்கள் கடந்த வாரம் கைப்பற்றினர என்பது குறிப்பிடத்தக்கது. .

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More