குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் முரண்பாடுகள் எதுவும் கிடையாது என அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அண்மையில் குற்றப் புலனாய்வு பிரிவு, நிதி மோசடி விசாரணைப் பிரிவு மற்றும் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழு என்பன தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட கருத்து காரணமாக எவ்வித முரண்பாடுகளும் ஏற்படவில்லை எனவும் கூட்டு எதிர்க்கட்சியின் சில உறுப்பினர்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் அரசாங்கத்தை கவிழ்த்து புதிய ஆட்சியை அமைக்க கனவு காண்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சுயாதீன ஆணைக்குழுக்களின் நடவடிக்கைகளில் தலையீடு செய்யப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.