150
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மாற்றுப் பாலினத்தவர்கள் இராணுவத்தில் எந்தவொரு நிலையையும் வகிக்க முடியாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து இராணுவ நிபுணர்களுடன் தாம் கலந்தாலோசித்ததாகத் தெரிவித்துள்ள அவர் மாற்றுப் பாலினத்தவர்கள் இராணுவத்தில் கடமையாற்றுவதனால் பாரியளவில் மருத்துவ செலவுகளை செய்ய நேரிடுவதாகத் தெரிவித்துள்ளார்.
மாற்றுப் பாலினத்தவர்கள் இராணுவத்தில் கடமையாற்றுவதற்கு ஒபாமா நிர்வாகம் அனுமதி வழங்கியிருந்தது. இந்தநிலையில் மாற்றுப் பாலினத்தவர்கள் அமெரிக்க இராணுவத்தில் பதவிகளை வகிக்க அனுமதிக்கப்படாது என ஜனாதிபதி ட்ராம்ப் கூறியுள்ளார்.
Spread the love