குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட இந்த அரசாங்கம் பதவி விலக வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ கோரியுள்ளார்.
பிணை முறி மோசடி தொடர்பில் அண்மையில் கிடைக்கப் பெற்றுள்ள ஆதாரங்களின் அடிப்படையில் அரசாங்கம் பதவி விலக வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
பேர்பெச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அர்ஜூன் அலோசியஸ் அப்போதைய நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் வீட்டு வாடகை செலுத்தியமை அம்பலமாகியுள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ராஜபக்ஸவினருக்கு எதிராக இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தால் பாரிய சர்ச்சைகள் வெடித்திருக்கும் எனவும், ஆளும் கட்சி அமைச்சர் என்பதனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.