Home உலகம்ஓரினச் சேர்ச்கையாளர் உரிமைகள் தொடர்பில் கட்சி கடந்த காலங்களில் தவறிழைத்துள்ளது – திரேசா மே:-

ஓரினச் சேர்ச்கையாளர் உரிமைகள் தொடர்பில் கட்சி கடந்த காலங்களில் தவறிழைத்துள்ளது – திரேசா மே:-

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

ஓரினச் சேர்க்கையாளர் உரிமைகள் தொடர்பில் கன்சர்வேட்டிவ் கட்சி கடந்த காலங்களில் தவறிழைத்துள்ளதாக பிரித்தானிய பிரதமர் திரேசா மே தெரிவித்துள்ளார்.

எனினும் அண்மைய ஆண்டுகளில் ஓரினச் சேர்க்கையாளர் உரிமைகள் தொடர்பில் கட்சியின் அணுகுமுறை பெருமிதம் கொள்ளும் வகையில் அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பால் நிலை அடிப்படையில், பாலின அடையாள அடிப்படையில் ஒடுக்குமுறைகள் மேற்கொள்ளப்ப டுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களை விடவும் தற்போது தமது கட்சி ஓரினச் சேர்க்கையாளர் உரிமைகள் தொடர்பில் முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் இன்னமும் ஓரினச் சேர்க்கையாளர்கள் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்படும் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More