Home இலங்கை கடற்படை முகாம் அமைப்பதற்கு சீனாவிற்கு அனுமதியளிக்கப்படாது என இலங்கை இந்தியாவிடம் தெரிவிப்பு

கடற்படை முகாம் அமைப்பதற்கு சீனாவிற்கு அனுமதியளிக்கப்படாது என இலங்கை இந்தியாவிடம் தெரிவிப்பு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கடற்படை முகாம் அமைப்பதற்கு சீனாவிற்கு அனுமதியளிக்கப்படாது என இலங்கை இந்தியாவிடம் தெரிவித்துள்ளது. வர்த்தக நடவடிக்கைகளுக்காகவே இலங்கையில் சீனாவிற்கு இடமளிக்கப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.
தந்திரோபாய ரீதியில் மிகவும் முக்கியமான ஓர் கேந்திர நிலையத்தில் அமைந்துள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் கடல் பட்டுப்பாதையின் வழியாகவே   அமைந்துள்ளது.

சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் ஹம்பாந்தோட்டையில் நிறுத்தப்படக்கூடுமெனவும் கடற்படை முகாம் அமைக்கப்படக்கூடுமெனவும் இந்தியா அச்சம் வெளியிட்டிருந்தது.

இந்தநிலையிலேயே  இந்தியாவின் இந்த அச்சம் குறித்து இலங்கை அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. வர்த்தக நோக்கிலேயே துறைமுகம் வழங்கப்படுவதாகவும் வேறு தேவைகளுக்கு துறைமுகத்தை பயன்படுத்த இடமளிக்கப்படாது எனவும் தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More