மத்திய வங்கியில் இடம்பெற்றுள்ள பிணைமுறி மோசடியிலிருந்து அரசாங்கம் தப்பித்துக்கொள்வதற்கு அமைச்சர் ரவி கருணாநாயக்கவை மட்டும் பதவியிலிருந்து விலக்க முற்படலாம் எனவும் எனினும் அதற்கு மாத்திரம் நாம் இடமளிக்கப்போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகிய இருவருக்கும் எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதற்கு கூட்டு எதிர்க்கட்சி எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளர்h.
நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பொலிஸாருக்கு உள்ளதெனினும் பொலிஸ் மா அதிபர் தற்போது சட்டத்தை அரசாங்கத்தின் தேவைக்கு அமைவாக மாற்றுகிறார் எனவும் வடக்கில் ஒரு விதமாகவும் தெற்கில் மற்றுமொரு விதமாகவும் சட்டம் அமுல்படுத்தப்படுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அரசாங்கம் வகைதொகையின்றி தேசிய வளங்கைள வெளிநாடுகளுக்கு தாரை வார்க்கிறது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம் எதிர்வரும் சனிக்கிழமை கைச்சாத்திடப்படவுள்ளது. இது மிகவும் பாரதூரமானதாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.