குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ரஸ்யா தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பின்பற்றும் நிலைப்பாட்டை நியாயப்படுத்தியுள்ள பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் பொறிஸ்ஜோன்சன் பராக் ஓபாமாவை விடவும் டிரம்ப் ரஸ்யா தொடர்பில் விட்டுக்கொடுப்பற்ற நிலைப்பாட்டை பின்பற்றுகின்றார் என தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் இந்த கருத்தை வெளியிட்டுள்ள பொறிஸ்ஜோன்சன் ரஸ்ய பிரச்சினையை டிரம்ப் கையாண்ட விதத்தை பாராட்டியுள்ளார்.
டிரம்ப் விளாடிமிர் புட்டினுடன் மிகவும் நெருக்கமாக காணப்படுகின்றார் என்ற குற்றச்சாட்டை பொறிஸ்ஜோன்சன் நிராகரித்துள்ளார்.
சிரியா அரசாங்கம் தனது மக்கள் மீது மேற்கொண்ட இரசாயன தாக்குதலிற்கு அமெரிக்க கொடுத்த பதிலடியை சுட்டிக்காட்டியுள்ள பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் இது பராக் ஓபமா காலத்தை விட கடுமையான நிலைப்பாடு பின்பற்றப்படுவதை வெளிப்படுத்துகின்றது என தெரிவித்துள்ளார்.
டிரம்ப் நிர்வாகம் எடுத்த பதில் நடவடிக்கை போன்று ஓபாமா நிர்வாகம் ஓரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்