144
ஜனாதிபதியும் பிரதமரும் இந்த வாரம் இந்தியா மற்றும் பெல்ஜியத்திலிருந்து நாடு திரும்பியதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய உரை காரணமாக தேசிய அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள பிளவிற்கு தீர்வை காண்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள கூடும்.
இலங்கை பொருளாதார நெருக்கடி மற்றும் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தை நிறைவேற்றுதல் போன்ற விடயங்கள் காரணமாக அழுத்தங்களில் சிக்கியுள்ள நிலையில் இரு தலைவர்கள் முன்னாள் உள்ள தெரிவுகள் மற்றும் உருவாகக்கூடிய நிலைமை குறித்து எங்கள் அரசியல் செய்தியாளர் ஆராய்கின்றார்
ஜனாதிபதியின் முன்னாள் உள்ள தெரிவுகள்
1- தன்னை ஆட்சியில் அமர்த்திய சிவில்சமூகத்தினரின் கோரிக்கைக்கு அடிபணிந்து இராணுவ புலனாய்வு பிரிவின் தலைமை அதிகாரி டுவான் சுரேஸ் சாலி மற்றும் நிதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவை பதவிநீக்கம் செய்வது.( சிவில்சமூகத்தினர் இந்த இருவரையுமே தேசிய அரசாங்கத்தின் வில்லன்களாக இனம்கண்டுள்ளனர்). ஜனாதிபதி இதனை செய்தால் மக்களின்நம்பிக்கையை அவர் பெறலாம்.புலனாய்வு அதிகாரியை பதவிநீக்கம் செய்வதன் மூலம் அவர் ஐக்கியதேசிய கட்சியின் பாராட்டை பெறலாம் ஆனால், விஜயதாச ராஜபக்சவை பதவிநீக்கம் செய்வதை பிரதமர் விரும்பமாட்டார்.
2- ஜனாதிபதி சட்டமொழுங்கு அமைச்சை தனதுகட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து நிதிக்குற்றங்கள் தொடர்பான விசேடபொலிஸ்பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு மீது செல்வாக்கு செலுத்தலாம் ஆனால் இதனை சிவில் சமூகத்தினர் கடுமையாக எதிர்க்ககூடிய ஆபத்துள்ளது மேலும் பிரதமருடன் மோதலிற்கு இது வழிவகுக்கும்.
3- எவரிற்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்காமல் விடலாம், ஆனால் ஜனாதிபதி பலவீனமான நிலையில் உள்ளார் என்ற ராஜபக்ச பிரிவின் கருத்தை இது பலப்படுத்தும்.
பிரதமர் முன்னாள் உள்ள தெரிவுகள்
நிதிக்குற்றங்கள் தொடர்பான விசேட பொலிஸ்பிரிவு மற்றும் சிஐடி தொடர்பில் காணப்படும் பிரச்சினைகளிற்கு தீர்வை காணலாம்.பதவிமாற்றங்களை மேற்கொள்ளலாம்.நடந்தவைகளிற்கு வேறு எவரின் மீது பழியை போடுவதன் மூலம் ஜனாதிபதியுடனான உறவினை சரிசெய்ய ரணில் முயலலாம்.எனினும் இது குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டுவராது.
ஜனாதிபதி வெளியிட்டுள்ள கரிசனைகள் மற்றும் விசாரணைகளில் போதிய வேகமின்மை குறித்த பிரதமரின் கவலை பற்றி ஆராய்வதற்காக அனைத்துக்கட்சிகளையும் சேர்ந்த அமைச்சரவை குழுவை பிரதமர் நியமிக்கலாம்.ஓரு விவகாரம் தொடர்பாக காலத்தை கடத்துவதற்கு ரணில்பயன்படுத்துகின்ற அவரிற்கே உரிய முறையிதுவாகும்.
4- புதிய தேர்தல்கள் இடம்பெற்றால் தனது உறுதியான பெரும்பான்மை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பாராளுமன்றத்தை பிரதமர் கலைக்கலாம்.
எதிர்காலத்தில் நடக்க கூடிய சிறந்த விடயம்
ஜனாதிபதியும் பிரதமரும் விசாரணை அமைப்புகளில் போலியான சில மாற்றங்களை செய்துவிட்டு சுயாதீன விசாரணை குழுக்களின் நடவடிக்கையை பாராட்டும் அறிக்கையை விடுக்கலாம்,அதன் பின்னர் மேலும்பல விசாரணையாளர்களை நியமித்து விசாரணைகளை துரிதப்படுத்தலாம். சிவில் சமூகத்தினர் இதனை வரவேற்கலாம், ஜனாதிபதியின் உரையை மறக்கலாம், மன்னிக்கலாம்.
இடம்பெறக்கூடிய பாதகமான விடயம்
ஜனாதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்தி சட்டமொழுங்கு அமைச்சை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரலாம்( 19 திருத்தம் இந்த விடயத்தில் ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரங்கள் குறித்து எதனையும் தெளிவாக தெரிவிக்கவில்லை)
ஜனாதிபதி சட்டமொழுங்கு அமைச்சரை மாற்றமாட்டார், ஆனால் பொலிஸ்துறையை பாதுகாப்பு அமைச்சிற்கு மாற்றலாம்.
இடம்பெறக்கூடிய மிக மோசமான விடயம்
ஜனாதிபதி சிறிசேனா தனக்கு 19வது திருத்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னரே மக்கள் ஆணைவழங்கிவிட்டனர் , அதனால் அமைச்சரை பதவிநீக்கம் செய்வதற்கான அதிகாரம் உள்ளது என வாதிடலாம்.மேலும் தனது புதிய சினேகிதனான முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயராஜபக்சவை தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றம் கொண்டுவரமுயலலாம்.
இதன் காரணமாக 19 வது திருத்தத்தை அர்த்தப்படுத்துவது குறித்த சர்ச்சை உருவாகலாம், நாடு அரசியல் நெருக்கடிக்குள் தள்ளப்படலாம்.முன்னைய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட நீதிபதிகளே இன்னமும் நீதித்துறையில் காணப்படுவதால் அவர்கள் சிறிசேனாவிற்கு ஆதரவாக செயற்படுவர்,ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஐக்கியதேசிய கட்சியை எதிர்கட்சிக்கு அனுப்பும் நிலையை அவர்கள் ஏற்படுத்தலாம்.இதனால் இலங்கை சர்வதேசசமூகத்திற்கான தனது வாக்குறுதிகளை கைவிடும் நிலை உருவாகலாம்.
இடைக்காலத்தில் காணப்படக்கூடிய அரசியல் சூழ்நிலை
ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ நாட்டில் ஸ்திரமின்மையை தோற்றுவிக்கும் விதத்தில் செயற்படமாட்டார்கள், எனினும் இரட்டை தலைமை காரணமாக நாடு ஸ்திரமற்ற நிலைக்கு தள்ளப்படும்.நிர்வாகம் ஜனாதிபதி ஆதரவாளர்கள், பிரதமர் ஆதரவாளர்கள் என இரண்டாக பிளவுபடும்.அரசமைப்பு உருவாக்கம்,நல்லிணக்க முயற்சிகள் முக்கியத்துவம் இழக்கும்,சர்வதே சமூகத்தின் நன்மதிப்பு குறைவடையும்,வரலாறு மீண்டும் திரும்பும், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை காண்பதில் முன்னேற்றம் ஏற்படாது பொருளாதாரம் மந்தநிலையில் காணப்படும்.
Spread the love