வடக்கு கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தின் பின்னரும் தொடர்ந்தும் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்க அதிகாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவன அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், இராணுவப் படையினர் போன்றோர் தொடர்ந்தும் வடக்கு கிழக்கு பெண்களை துஸ்பிரயோகம் செய்து வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கை முழுவதிலும் வீட்டு வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், வடக்கு கிழக்கில் இவ்வாறான சம்பவங்களின் எண்ணிக்கை அதிகளவில் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச அனர்த்த நிறுவனம் இது பற்றிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆயுத போராட்டம், இராணுவ மயமாக்கள், கலாச்சார காரணிகள் போன்றவற்றினால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அதிகளவில் பாலியல் வன்கொடுமைகள் பதிவாகின்றன என சுட்டிக்காட்டியுள்ளது.
அரச அதிகாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவன அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், இராணுவப் படையினர் உள்ளிட்டவர்கள் தம்மை துஸ்பிரயோகம் செய்வதாக பல பெண்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். காணாமல் போனவர்களை கண்டு பிடித்துக் கொடுப்பதற்கு, பொருளாதார நலன்களை பெற்றுக்கொள்வதற்கு, வாழ்வாதாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கு இவ்வாறு ஆண்கள் பாலியல் லஞ்சம் கோருவதாகத் தெரிவித்துள்ளனர். பெண் தலைமைதுவ குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் குறுகிய கால அடிப்படையில் ஆண்களுடன் பாலியல் தொடர்புகளைப் பெணி பொருளாதார நலன்களை அடைந்து கொள்ளும் சந்தர்ப்பங்களும் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த இரண்டு மாகாணங்களிலும் பால் நிலை சமத்துவமின்றமை அதிகளவில் நீடித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாலியல் துஸ்பிரயோக சம்பவங்களுக்காக நீதி நிலைநாட்டப்படும் சந்தர்ப்பங்கள் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றது என தெரிவிக்கப்படுகிறது.